மீண்டும்   பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை  முதல் | மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் மரணம்

கொரோனா தொற்று அப்டேற்

யாழ். ஆய்வுகூட மற்றும் யாழ்.பல்கலைக்கழக பரிசோதனை முடிவுகளின் படி - வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். ஆய்வுகூடங்களில் இன்றைய தினம் (பெப்-15) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் (பெப்-15) 30 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 06 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் யாழ். பல்கலைக் கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 26 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 08 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களுள் - யாழ். போதனா வைத்தியசாலையில் – 05 பேர் (12 வயது சிறுவன் உட்பட) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் – 04 பேர் ( 22 , 23 வயது இளைஞர்கள் உட்பட), சாவகச்சேரி பிரதேச வைத்தியசாலையில் 04 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையில் 58 வயது ஆண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

தென்னமராட்சியில் இரண்டு நபர்களுக்கு கொரோனா, டெங்கு நோய்த் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மீசாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சரசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஒருவர் ஆகியோருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான இருவரும் நேற்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் இருவரும் அன்ரிஜென் மற்றும் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இருவருக்கும் இரண்டு நோய்த் தாக்கங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் தென்மராட்சியிலேயே டெங்குப் பாதிப்பு அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் நாளை புதன்கிழமை முதல் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் நாளை புதன்கிழமை முதல் மீளவும் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார தொழில்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் நிலை காணப்பட்டது. இதையடுத்து, கடந்த 9ஆம் திகதி தொடக்கம் யாழ். போதனா மருத்துவமனையில் வெளிநாடு செல்வோருக்கான பி. சி. ஆர். சோதனைகள் மறு அறிவித்தல்வரை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் மரணம்

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர் என நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் இந்த மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றது.

வவுனியா, கணேசபுரம் பகுதியிலிருந்து மரக்காரம்பளை வீதியூடாக பெண்ணொருவர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியின் எதிர்ப்பக்கத்தில் உள்ள ஒழுங்கை ஒன்றுக்குள் திரும்ப முற்பட்டுள்ளது. இதன்போது எதிர்த்திசையில் வந்த பல்சர் ரக மோட்டார் சைக்கிள், பெண் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளின் சாரதியான பண்டாரிக்குளம், அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய சிறிரஞ்சன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றைய இரு மோட்டார் சைக்கிளின் சாரதிகளும் காயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மீண்டும்   பி.சி.ஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை  முதல் | மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் ஒருவர் மரணம்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House